காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கிய ஆர்ஜேடி!

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 10:36 pm
bihar-rjd-allocate-only-nine-seats-for-congress-in-their-alliance

பிகார் மாநிலத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒன்பது இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பிகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு பிரதான மாநில கட்சிகளில் ஒன்றாக விளங்கும் ஆர்ஜேடி தலைமையில் மகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில்  ஆர்ஜேடிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் காங்கிரஸுக்கு ஒன்பது இடங்களே வழங்கப்பட்டுள்ளது.

மீதியுள்ள 11 இடங்களில் ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சிக்கு 5 இடங்கள், ஹிந்துஸ்தானி அவாமி மோட்சாவுக்கு 3 இடங்கள், விகாசிஹில் இன்சான் கட்சிக்கு இரண்டு இடங்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்ஜேடி எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான மனோஜ் ஜா, தலைநகர் பாட்னாவில் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில், பாஜக 17 இடங்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. பிகாரில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close