பா.ஜ.க., துணைத்தலைராக உமாபாரதி நியமனம்

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 09:01 pm
uma-bharathi-appointed-as-national-vice-president-of-bjp

மத்திய அமைச்சர் உமா பாரதி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய அமைச்சர் உமா பாரதி, கங்கை துாய்மைபடுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கட்சிப் பணி மற்றும் கங்கை துாய்மை திட்டத்தில் தீவிர கவனம் செலுத்துவதற்காக, அவர் இம்முறை, மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். 

இந்நிலையில் உமா பாரதியை, பா.ஜ., தேசிய துணைத் தலைவராக நியமித்து, அந்த கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதன் மூலம், அவர், கட்சிப் பணிகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close