தேர்தலில் போட்டியில்லை.. உமா பாரதி திடீர் முடிவு!

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Mar, 2019 11:32 am
uma-bharti-appointed-bjp-vice-president-days-after-backing-out-of-polls

பாஜக கட்சியின் துணை தலைவராக எம்.பி உமா பாரதி தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் பாஜகவை சேர்ந்த உமா பாரதி. இவர் வரிசையாக பல்வேறு லோக்சபா தேர்தல்களில் பாஜக சார்பாக போட்டியிட்டு உள்ளார். இவர் பாஜகவில் அறியப்படும் மிக முக்கியமான பெண் அரசியல்வாதிகளில் ஒருவர்.

இவர் அரசியலில் 35 வருடங்களாக அனுபவம் கொண்டவர். 1984ல் இவர் முதல்முறை  மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். இந்த நிலையில் இந்தமுறை  மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இவர் அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இவர் கூறி இருக்கிறார். கடந்த 2014  மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி தொகுதியில் உமா பாரதி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து இவருக்கு குடிநீர் மற்றும் சுகாதார துறை வழங்கப்பட்டது.

இவர் பெண் வேட்பாளர் என்பதால் பாஜக இவரை மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் நிற்க வைக்கும் எண்ணத்தில் இருந்தது. ஆனால் இவர் மீண்டும் தேர்தலில் நிற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதையடுத்து உமா பாரதிக்கு பாஜக கட்சியில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close