கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றம்: காங்கிரஸ் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 02:31 pm
congress-changed-the-canitate-for-amroha-constituency

உத்தர பிரதேச மாநிலத்தில், ஏற்கனவே அறிவித்த வேட்பாளரை திடீரென மாற்றி அறிவித்து, காங்கிரஸ் மேலிடம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மக்களவை தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரஷித் அல்வி போட்டியிடுவார் என கட்சி மேலிடம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், அந்த தொகுதியில், அல்விக்கு பதிலாக சச்சின் சவுதாரி போட்டியிடுவார் என கட்சி மேலிடம் இன்று திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளரான அல்வி, அந்த தொகுதியில் பிரசாரத்தை துவக்கி, மக்களை சந்தித்து வருகிறார். 

இந்த நிலையில், அந்த கட்சி, அம்ரோஹா தொகுதியில் வேட்பாளரை திடீரென மாற்றி அறிவித்துள்ளது, அல்வியின் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேட்பாளர் மாற்றம் குறித்த அறிவிப்பை, கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் எழுத்துப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close