ஒடிஸா: முன்னாள் டிஜிபி பாஜகவில் சேர்ந்தார்!

  ராஜேஷ்.S   | Last Modified : 25 Mar, 2019 03:35 pm
former-ips-officer-joined-bjp-party-inspired-by-modi

ஒடிஸாவில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் மிஸ்ரா பாஜகவில் சேர்ந்துள்ளார். அம்மாநில கட்சி அலுவலகத்தில் நேற்று பாஜகவின் மூத்த தலைவர்கள் தர்மேந்திர பிரதான், பிஷ்வா பூஷன் ஹரிசந்தன் முன்னிலையில் அவர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 

இவர், 2014- 2016-ஆம் ஆண்டு வரையில் சிஆர்பிஎஃப் டிஜிபியாக பணியாற்றி வந்தார். 

பாஜகவில் இணைந்தது பற்றி அவர் கூறுகையில்,  'எனக்கு அரசியலில் நுழைய திட்டம் ஏதும் இல்லை. ஆனால், பிரதமர் மோடி பணி செய்யும் ஸ்டைல் என்னை மிகவும் கவர்ந்ததால், தற்போது அரசியலில் நுழையும் எண்ணம் ஏற்பட்டு, பாஜவில் சேர்ந்தேன். அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம், ஒரு புதிய ஒடிஸாவை மாற்றும் நேரம் இதுவாக அமையும்' என்று  அவர் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பிரகாஷ் மிஷ்ரா கட்டாக் தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close