பிரதமர் மாேடி பற்றிய திரைப்படத்திற்கு தடை கோரும் காங்கிரசார்!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 04:45 pm
congress-appoints-special-committee-to-move-ec-to-defer-release-of-pm-modi-biopic

பிரதமர் நரேந்திர மாேடியின் வாழ்க்கை வரலாறை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட  தடை விதிக்க கோரி, காங்., மூத்த தலைவர்கள் தேர்தல் கமிஷனில் முறையிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மாேடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், ‛பி.எம்.நரேந்திர மாேடி’ என்ற பெயரில், திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. 

முதலில், ஏப்., 12ல் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது, ஏப்., 5ல் இந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் இந்த திரைப்படம் வெளியானால், அது, பா.ஜ.,வுக்கு சாதகமாக ஆகிவிடும் என, காங்கிரஸ் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால், இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி, தேர்தல் கமிஷனில் முறையிட அந்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. 

இதற்காக, கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து காங்., மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த குழு, இன்று மாலைக்குள் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close