காங்கிரஸ் தொண்டர்களே என்னை ஆதரிக்கிறார்கள் - நிதின் கட்கரி

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 10:40 am
congress-workers-supporting-me-nitin-gadkari

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்னை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நிதின் கட்கரி போட்டியிடுகிறார். அங்கு, வரும் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நிதின் கட்சி பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:

ஜாதி, மதம், மொழி, கட்சி அடையாளங்களைக் கடந்து நான் சேவையாற்றியுள்ளேன். ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்கள். நாங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கூட, மனப்பூர்வமாக உங்களையே ஆதரிக்கிறோம் என்று தெரிவித்தார்கள். அனைவரின் ஆதரவும் எனக்கு உள்ளது என்றார் கட்கரி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close