ராகுலின் கபட நாடகம்? போட்டு உடைக்கும் வீடியோ ஆதாரம்!

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 07:45 pm
rahul-s-drama-on-helping-to-the-journalist

டெல்லி ஹுமாயூன் சாலையில் சென்று கொண்டிருந்த பத்திரக்கையாளர் ஒருவர், விபத்தில் சிக்கி காயமடைந்ததாகவும், அவரை, காங்., தலைவர் ராகுல், தன் காரில் ஏற்றி சென்று, மருத்துவமனையில் அனுமதித்தாகவும் சமூக வலைதளங்களில் ஓர் செய்தி வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ராகுலின் இந்த செயல் ‛செட்டப்’ நடவடிக்கை எனக் கூறும் வகையிலான வீடியோ ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. 

நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டு போடப்பட்ட தோற்றத்தில் காணப்படும் ஒரு நபர், தன்னை ஓர் பத்திரிக்கையாளர் என அறிமுகம் செய்து கொள்கிறார். பின், அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: ‛‛நான் ஹுமாயூன் சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, அவ்வழியே வந்த மாேட்டார் சைக்கிள் மோதி நான் கீழே விழுந்தேன். அதில், என் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. 

அப்போது, அவ்வழியே வந்த ஓர் கார், என் அருகே நின்றது. அதிலிருந்து காங்., தலைவர் ராகுல் கீழே இறங்கினார். அவரை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்த நான், தங்களை சந்தித்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்றேன். 

உடனே அதற்கு பதில் அளித்த ராகுல், ‛என்னை பார்ப்பதெல்லெம் பெரிய விஷயம் அல்ல; உங்கள் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. முதலில் மருத்துவமனைக்கு செல்வோம்’ எனக் கூறி, தன் காரில் என்னையும் ஏற்றிக் கொண்டார். 

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, அங்குள்ள டாக்டரை சந்தித்து, எனக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் படி கூறினார். எனக்கு சிகிச்சை முடியும் வரை, நான்கு மணி நேரம் உடன் இருந்தார். இப்படிப்பட்ட தலைவருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்’’ என்பதாக அந்த வீடியோவில் அவர் பேசுகிறார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 

இந்நிலையில், அதே நபர், ராகுலுடன் காரில் அமர்ந்திருப்பதை, இன்னொரு நபர் மொபைல் கேமராவில் படம் பிடிக்கிறார். அதை பார்த்து பேசும் அவர், ‛‛சார்... இன்னொரு முறை என் தலையை துடைத்துவிடுங்கள்’’ என்கிறார். ராகுலும், உடனே அவரின் தலையை மீண்டும் துடைக்கிறார். அப்போது அவரின் தலையில் காயம் ஏற்பட்டதற்கான தடமும் இல்லை. ரத்தம் வழிந்ததற்கான சுவடும் இல்லை. 

அப்போது அந்த நபர் மீண்டும் சொல்கிறார், இந்த வீடியோவை நான் ஊடகங்களில் பயன்படுத்திக் கொள்வேன். டிவி சேனல்களுக்கு அனுப்பி வைப்பேன் என்கிறார். உடனே, ராகுலும், அந்த நபரும் பலமாக சிரிக்கின்றனர். 
இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

அப்படியென்றால், பத்திரிக்கையாளரை காப்பாற்றியதாக கூறி முதலில் வெளியான வீடியோ, காங்., தலைவர் ராகுலின் கபட நாடகத்தின் ஒரு பகுதியா என, பல்வேறு தரப்பினரும், சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close