எம்.பி. எலக்ஷனை விட்டுட்டு 2022 -க்கு தயாராகணுமா?: புலம்பும் காங்கிரஸ் தொண்டர்கள்!

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 10:21 pm
not-for-this-one-for-the-2022-priyanka-vadra-asks-to-party-workers-in-u-p

மக்களவைத் தேர்தலை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 2022-இல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று, காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு பிரியங்கா வதேரா அறிவுறுத்தியுள்ளது அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சியினர் வேட்டியை வரிந்துக்கட்டிகொண்டு பிரசார களத்தில் குதித்துள்ளனர்.
நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

தனித்துப் போட்டியிடுவதாலும்,  ஆளும் பாஜக, பகுஜன் சமாஜ் -சமாஜ்வாதி கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுவதாலும், காங்கிரஸுக்கு அங்கு வாழ்வா? சாவா? என்ற நிலை.

இத்தகைய சூழலில், உத்தரப் பிரதேச மாநில (கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா  வதேரா, அமேதி தொகுதிக்கு உட்பட்ட கௌரிகஞ்ச்  பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, "தேர்தலுக்காக நீங்கள் எல்லோரும் தயாராகி வருகிறீர்களா? எனக் கட்சித் தொண்டர்களை பார்த்து கேட்ட பிரியங்கா, கூடவே, வரும் மக்களவைத் தேர்தல் ஒரு பக்கம் இருக்கட்டும். உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 2022-இல் நடைபெற்ற தேர்தலுக்கு  தயாராகுங்கள்" எனவும் கூறினார்.

"மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லை... அதில் வெற்றி பெறுவது எப்படி? என்று ஆலோசிப்பார் என பார்த்தால், 2022-யை பற்றி பேசுகிறாரே... அப்போ இந்தத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் நிலை பிரியங்காவுக்கு தீர்க்கதரிசனமாக தெரிந்துவிட்டதா?" என அந்த மாநில காங்கிரஸ் தொண்டர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close