இன்று மனு தாக்கல் செய்கிறார் அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 09:56 am
amit-shah-to-file-nomination-in-gandhi-nagar-today

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று மனு தாக்கல் செய்யவுள்ளார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக, காந்தி நகரில் நடைபெறவுள்ள நடைபெறவுள்ள அமித் ஷாவுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், அகாலி தளம் கட்சியின் தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரும், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். காந்தி நகர் தொகுதி, இதற்கு முன் பாஜக மூத்த தலைவர் அத்வானி போட்டியிட்டு வெற்றி பெற்றதாகும்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close