பிரதமர் மோடியின் பேச்சில் விதிமீறல் இல்லை - தேர்தல் ஆணையம்

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 10:22 am
pm-modi-s-speech-not-violating-the-model-code-election-commission

விண்வெளியில் எதிரி நாடுகளின் உளவு செயற்கைக்கோளை அழிக்கும் வகையிலான ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டதில் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தேர்தல் சமயத்தில் இத்தகைய அறிவிப்பை அரசு ஊடகங்கள் வாயிலாக பிரதமர் வெளியிட்டது விதி மீறல் ஆகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து, துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையிலான குழுவினர் புகார் குறித்து ஆய்வு செய்தது.

குறிப்பாக, டிடி நியூஸ் மற்றும் அனைத்து இந்திய வானொலி ஆகிய அரசு செய்தி நிறுவனங்களில் பிரதமரின் பேச்சு ஒளிபரப்பானது குறித்து ஆராயப்பட்டது. இதில், அந்த நிறுவனங்கள் ஏ.என்.ஐ. தனியார் நிறுவனத்திடம் இருந்தே ஒளி-ஒலி பதிவை பெற்றிருப்பதும், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அரசு ஊடகங்களை பிரதமர் தவறாகப் பயன்படுத்தவில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது என்று சீதாராம் யெச்சூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close