மேற்கு வங்கம் - கருத்துக்கணிப்பில் மம்தா முன்னிலை, 2ம் இடத்தில் பாஜக

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 12:58 pm
mamta-ahead-in-west-bengal-s-poll-prediction-bjp-in-2nd-place

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மம்தா பானர்ஜி தலைமையிலான, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. பாஜக இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஏபிபி நியூஸ் - நியல்சன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த முறை திரிணமூல் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 31 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு, இந்தத் தேர்தலில் 8 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்த முறை ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காது என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்களில் வெற்றி கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close