தந்தையின் முடிவு தாமதமானது: நடிகை சாேனாக்ஷி சின்ஹா கருத்து

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 01:10 pm
it-s-too-late-sonakshi-on-chatruhan-s-decision-to-join-congress

பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்த, சத்ருகன் சின்ஹாவின் முடிவு மிகவும் தாமதமானது என, அவரது மகளும், பாலிவுட் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா, பா.ஜ.,விலிருந்து விலகி, சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசின் அமைச்சராகவும் இருந்துள்ளார். பீஹார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், லோக்சபா எம்.பி.,யாகவும், ராஜ்யசபா எம்.பி.,யாவும் இருந்துள்ளார். 

இந்நிலையில், கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்த கட்சியிலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். இது குறித்து, அவரது மகளும், பிரபல நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா கூறியதாவது:

‛‛என் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, பல ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருந்து வந்தார். வாஜ்பாய் காலத்திலேயே மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால், தற்போதைய கட்சித் தலைமை அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. 

அவருக்கு மரியாதை இல்லா இடத்தில் அவர் இருக்க தேவையில்லை. அவரை மதிக்கும் கட்சியில் அவர் இணைந்துள்ளார். என்னை பொறுத்தவரை, இது அவர் தாமதமாக எடுத்த முடிவு. இதை எப்போதோ செய்திருக்க வேண்டும்’’ என அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close