ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது - ராகுல் காந்தி இறுதி முடிவு

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 10:19 am
no-alliance-with-aap-rahul-gandhi-taken-the-final-decision

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்து வந்த நிலையில், தற்போது கூட்டணி கிடையாது என்று தீர்க்கமான முடிவை ராகுல் காந்தி எடுத்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்தால் கட்சியின் எதிர்கால நலன் பாதிக்கப்படும் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் கூறியிருந்தார். எனினும், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், கூட்டணி வேண்டாம் என்று அவர் தீர்க்கமான முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close