விபத்தில் சிக்கிய வேட்பாளர் - கொலை சதி நடப்பதாகக் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 10:39 am
bihar-grand-alliance-candidate-suffered-with-accident

பீகாரில் மகா கூட்டணியில் உள்ள ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் உபேந்திர பிரசாத் நேற்றிரவு திடீரென விபத்தில் சிக்கினார். ஆனால், இது தன்னை கொலை செய்வதற்கான சதி என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உபேந்திர பிரசாத், ஔரங்காபாத் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.  இந்நிலையில், நேற்றிரவு தேர்தல் பிரசாரத்துக்காக தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்புறத்தில் தவறான திசையில் வந்த கார் ஒன்று அவரது கார் மீது மோதியது. எனினும், ஓட்டுநர் சாதுர்யமாக காரின் வேகத்தை கட்டுப்படுத்தியதால் உபேந்திர பிரசாத், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அதே சமயம், இது தன்னை கொலை செய்வதற்கான சதி என்று அவர் புகார் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close