ராகுல் சொல்வது நடைமுறை சாத்தியமற்றது: அரவிந்த் பனகாரியா

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 11:18 am
rahul-s-nyuntam-aay-yojana-is-almost-impossible-aravind-panagariya

‛‛நாட்டில் வசிக்கும் ஐந்து கோடி ஏழைகளுக்கு, குறைந்த பட்ச வருமானமாக, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, நடைமுறை சாத்தியமற்றது’’ என, முக்கிய திட்டங்களில் மத்திய அரசுக்கு  ஆலோசனை வழங்கும், நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணை தலைவர், அரவிந்த் பனகாரியா விளக்கம் அளித்துள்ளார். 

வரும் மக்களவை  தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில், பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. 

அந்த வகையில், சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ராகுல், வரும் தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மலர்ந்தால், நாட்டில் வசிக்கும் ஐந்து கோடி ஏழைகளுக்கு, குறைந்த பட்ச ஆண்டு வருமானமாக, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். 

ராகுலின் கருத்துக்கு, பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். நாட்டின் அடிப்படை பொருளாதாரம் புரியாமல் அவர் பேசுவதாக குற்றம் சாட்டினர். 

இந்நிலையில், மத்திய அரசுக்கு முக்கிய திட்டங்கள் வகுத்து தரும், அவற்றை செயல்படுத்த வழிகாட்டும் குழுவாக உள்ள நிடி ஆயோக் அமைப்பின், முன்னாள் தலைவர் அரவிந்த் பனகாரியா, ராகுலின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து, பனகாரியா கூறியதாவது: ‛‛ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளவர்கள் அதற்கான வருவாய் வழிமுறை குறித்து பேசவில்லை. ஐந்து கோடி பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்க, ஆண்டுக்க, 3.6 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இது, நாட்டின் மாெத்த பட்ஜெட்டில், 13 சதவீதம் ஆகும். நாட்டின் பாதுகாப்புக்காக செலவிட்டடும் தொகையை விட அதிகம். 

அப்படி இருக்கையில், இவ்வளவு பெரிய தொகையை எப்படி ஒதுக்க முடியும். அதற்கான வருவாய் வழி என்ன என்பது குறித்து யாரும் வாய் திறக்கவில்லை. அடிப்படையில் இந்த அறிவிப்பை திட்டமாக மாற்றி செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது’’ என அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close