மோடியே மீண்டும் பிரதமர் -யோகா குரு ராம்தேவ் நம்பிக்கை

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 11:19 am
baba-ramdev-vows-narendra-modi-for-pm-again

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எண்ணமாக உள்ளது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராம்தேவ் கூறியபோது, “இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்றான தலைவர்களை நாம் பார்க்க முடியவில்லை. இந்தக் காவலர் திருடன் அல்ல; மிகத் தூய்மையானவர் அவர். இதை நாட்டு மக்கள்தான் சொல்கின்றனர். பிரதமர் மோடி எதையேனும் கொள்ளையடித்துவிட்டார் என்று இந்த உலகில் யாருமே சொல்லிவிட முடியாது. ஆனால், சிலர் மட்டும் மோடி குறித்து அவதூறுகளை பரப்புகின்றனர். அவர்களுக்கும், மோடிக்கும் இடையே நல்ல நட்புறவு இல்லை என்பதால் அவர்கள் இதை செய்திருக்கலாம். ஆனால், நாட்டுக்காக மோடி ஆற்றியுள்ள சேவைகளை ஒருவரும் கேள்வி கேட்க முடியாது. பாலாகோட் தாக்குதல், ஏ-சாட் சோதனை போன்றவை, நாட்டு மக்களிடம் மோடிக்கான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close