சோனியாவை எதிர்த்து ரேபரேலியில் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப்சிங் போட்டி

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Apr, 2019 06:20 pm
bjp-releases-fresh-list-rebel-cong-mlc-to-take-on-sonia-gandhi-from-rae-bareli

மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார் என பாஜக அறிவித்துள்ளது. 

மக்களவை தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முக்கிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.,

பாஜக சார்பில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

அதில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.

இதேபோல், உத்தரப்பிரதேசத்தின் அசம்கார் தொகுதியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை எதிர்த்து போஜ்பூரி நடிகர் மற்றும் பாடகரான தினேஷ் லால் யாதவும், மெயின்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவை எதிர்த்து பிரேம் சிங் ஷக்யாவும் போட்டியிடுகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close