மகாராஷ்டிரத்தில் போட்டியிடவில்லை - ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 10:37 am
aap-will-not-contest-lok-sabha-polls-in-maharastra

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் போட்டியிடுவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. எனினும், இந்த ஆண்டு இறுதியில் அங்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிர மாநில ஒருங்கிணைப்பாளர் சுதிர் சாவந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் மாநில செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆலோசனைக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசு திட்டக்குழுவை அழித்ததில் தொடங்கி, ஆர்பிஐ, சிபிஐ, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகளின் முடிவுகளில் தலையிட்டு வந்தது என்றும் சுதிர் சாவந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close