அமேதி மக்களை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - ஸ்மிருதி இரானி

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 10:37 am
smiriti-irani-mocks-rahul-gandhi-for-contesting-in-wayanad

அமேதி தவிர்த்து வேறொரு தொகுதியில் போட்டியிடுவதன் மூலமாக இங்குள்ள மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என்று மத்திய அமைச்சரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி அமேதியில் தொடர்ந்து எம்.பி.யாக இருந்து வருபவர். கடந்த முறை அவரை எதிர்த்து இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருந்தி இரானி, பின்னர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சரானார். தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தவிர்த்து, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

இதுகுறித்து ஸ்மிருதி இரானி கருத்து தெரிவிக்கையில், “அமேதியில் 15 ஆண்டுகளாக எம்.பி.யாக உள்ளவர் தனது ஆதரவாளர்களை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளார். இந்தத் தொகுதியில் மக்கள் ஆதரவு இருக்காது என்பதால்தான் அவர் வேறு தொகுதியை தேர்வு செய்துள்ளார்’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close