சோனியா, முலாயம் போட்டியிடும் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 11:00 am
bjp-announces-candidates-against-sonia-mulayam-akilesh

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது தந்தை முலாயம் சிங் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

சோனியா காந்தியின் அமேதி தொகுதியில், அவரை எதிர்த்து தினேஷ் பிரதாப் சிங்கை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவர் இதற்கு முன், காங்கிரஸ் சார்பில் சட்ட மேலனை உறுப்பினராக இருந்து, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தவர்.

அசம்கார் தொகுதியில் அகிலேஷ்  யாதவை எதிர்த்து போஜ்புரி மொழிப் பாடகர் தினேஷ் லால் யாதவை பாஜக களமிறக்கியுள்ளது. முலாயம் சிங் போட்டியிடும் மெயின்புரி தொகுதியில் பிரேம் சிங் சாக்யாவை வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close