மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வரின் மகன்!

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Apr, 2019 09:38 pm
congress-fields-kamal-nath-s-son-nakul-from-chhindwara

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் அம்மாநில முதல்வர் கமல்நாத்தின் மகன் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் நோக்கத்தில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் 12 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.  

இதில், சிந்த்வாரா தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் சிங் ராகுல், ஷித்தி தொகுதியிலும், அருண்யாதவ், கான்த்வா தொகுதியிலும் களமிறங்குகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close