நாட்டின் மிகப் பெரிய சந்தர்ப்பவாதி சந்திரபாபு நாயுடு - அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 10:45 am
chandrababu-naidu-a-great-oppurtunist-in-the-country-amit-shah

நாட்டிலேயே மிகப் பெரிய சந்தர்ப்பவாதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் என்று பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் நேற்று அமித் ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

2014-இல் மோடி அலை வீசியபோது தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. அதற்கு பிறகு, ஆந்திராவில் அரசுக்கு எதிரான அலை இருப்பதை உணர்ந்த சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறி வந்தார். நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம். சந்திரபாபு நாயுடு மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய முயற்சிப்பார் என தகவல் வருகிறது. ஆனால், அவருக்கு இனி எப்போதுமே கதவுகள் திறக்கப்படாது என்றார் அமித் ஷா.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close