அத்வானி பாஜகவின் உண்மையான கொள்கையை மிக சிறப்பாக தெளிவுப்படுத்தி உள்ளார் : பிரதமர் மோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Apr, 2019 11:25 am
perfectly-sums-up-true-essence-of-bjp-tweets-pm-modi-on-lk-advani-blog

பாஜக தொண்டனாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி எங்களை அரசியல் ரீதியாக ஏற்காதவர்கள் எதிரிகளோ, தேச விரோதிகளோ அல்ல, எதிர்பாளர்கள் மட்டுமே என்று நேற்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அத்வானியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவின் உண்மையான கொள்கையை அத்வானி மிக சிறப்பாக தெளிவுப்படுத்தி உள்ளார் எனவும் முதலில் தேசம், அடுத்ததுதான் கட்சி, அதன் பிறகே சொந்த நலன் என்ற கொள்கை மூலம் பாஜக தொண்டனாக இருப்பதில் பெருமை அடைகிறேன் எனவும் எழுதி உள்ளார்.

இந்த கொள்கையை அத்வானி போன்ற உயர்ந்த தலைவர்கள் மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக கூறியிருப்பது பெருமை அளிக்கிறது எனவும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close