தொண்டர்களுக்கு அரசு வேலை - காங்கிரஸ் அமைச்சரின் தடாலடி வாக்குறுதி

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 12:19 pm
cong-minister-promises-govt-job-for-party-s-booth-workers

தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அனைத்து தொண்டர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் அமைச்சர் வாக்குறுதி அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டியிடும் போபால் தொகுதியில், மாநில சட்டத்துறை அமைச்சர் பி.சி.சர்மா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனியார் துறை அல்லது அரசுத்துறையில் வேலை வழங்கப்படும் என்று அவர் பேசினார்.

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று பாஜக மூத்த தலைவர் ரமேஷ்வர் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், அமைச்சரின் பேச்சு குறித்து விளக்கம் கேட்டு, அவருக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சுதாம் கடே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close