நாட்டின் எதிரிகளை அடித்தால் இங்கிருப்பவர்கள் அழுகின்றனர் - பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 01:07 pm
pm-mod-s-campaign-in-amroha-uttarpradesh

நாட்டின் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இங்கிருப்பவர்களுக்கு ஏன் அழுகை வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். 

உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா நகரில் பிரதமர் மோடி இன்று பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “தீவிரவாதிகளுக்கு அவர்களது சொந்த மொழியில் பதிலடி கொடுப்பது இங்கிருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை. எதிரிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தும்போது, இங்கிருக்கும் சிலர் அழத் தொடங்குகின்றனர். சர்வதேச அரங்கில், பாகிஸ்தான் அம்பலப்பட்டு நிற்கும்போது, இவர்கள் (எதிர்க்கட்சிகள்) அந்நாட்டுக்கு ஆதரவாக பேசுகின்றனர்’’ என்றார் மோடி.
newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close