வயநாடு தொகுதியின் பாஜக பொறுப்பாளராக முக்தர் அப்பாஸ் நக்வி நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 05:19 pm
mukhtar-abbas-naqvi-appointed-as-election-incharge-of-wayanad-constituency

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக சார்பில் வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக, சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக போட்டியிடும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். நேற்று, வயநாடு மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. 

இதைத்தொடர்ந்து, கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் கே.வீ.தங்கபாலு நியமிக்கப்பட்டார். 

இதையடுத்து, பாஜக சார்பில் வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி சார்பில் பாரத் தர்ம ஜனசேனா அமைப்பின் தலைவர் துஷார் வெல்லப்பள்ளி வயநாட்டில் போட்டியிடுகிறார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close