ஏப்ரல் 10ல் அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல்!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 05:24 pm
rahul-gandhi-files-nomination-at-amethi-constituency-on-april-10

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, வருகிற ஏப்ரல் 10ம் தேதி அங்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், வரும் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து இந்த மாநிலத்தில் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக போட்டியிடும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வருகிற ஏப்ரல் 10ம் தேதி அங்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவரது தாயார் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் ஏப்ரல் 11ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்.

ராகுல் காந்தியின் சகோதரியும், உத்தரபிரதேச மாநில பொதுச் செயலருமான ப்ரியங்கா காந்தி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முன்னரே அறிவித்திருந்தார். 

ராகுல் காந்தி அமேதி தொகுதி மட்டுமின்றி,  கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். நேற்று, வயநாடு மக்களவை தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close