ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு- காந்தி குடும்பத்தை சாடிய பிரதமர் மோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Apr, 2019 05:51 pm
pm-modi-raises-vvip-chopper-scam-charge-sheet-naming-ap-fam-in-rally

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் யார் பயன் அடைந்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், நேற்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை, 55 பக்கங்களுடன் கூடிய 4வது துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 

இதில், 'மிஸஸ் காந்தி' என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், மிஸஸ் காந்தி என்பது யாரை குறிக்கிறது மற்றும் அவரது விபரங்கள் எதுவும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெறவில்லை. மேலும், மிஷெல் அளித்த டைரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

குற்றப்பத்திரிகையில், AP, FAM, Italy woman's son உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. இதற்கு மிஷெல் தரப்பில், 'அஹமது பட்டேல்' (AP), பேமிலி (FAM) 'இத்தாலி பெண்ணின் மகன்',  'வருங்கால இந்திய பிரதமர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து அஹமது பட்டேல் எந்த குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். மேலும் இந்த ஊழலில் யார் பயன் அடைந்திருப்பார்கள் என்பது மக்களுக்கு எவரும் எடுத்துச்சொல்லாமலேயே புரியும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close