மகாகத்பந்தன் கூட்டணியின் பிரதமா் வேட்பாளா் யாா்? மாயாவதி சூசக தகவல்

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Apr, 2019 01:25 pm
pm-pitch-for-mayawati-but-her-party-graph-is-sliding

தான் நான்கு முறை முதல்வராக இருந்த அனுபவம் உள்ளதால் பிரதமராக தன்னால் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று பகுஜன் சமாஜ கட்சி தலைவா் மாயாவதி சூசகமாக தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளாா்.

மக்களவை தோ்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவா் மாயாவதி கடைசி நேரத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

80 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து தோ்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில் பிஎஸ்பி தலைவா் மாயாவதி, தோ்தல் பிரசாரத்திற்காக ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகாண்ட, சட்டீஸ்கா், கா்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி கட்சிக்களுக்காக பிரசாரம் செய்து வருகிறாா்.

அண்மையில் ஆந்திரப்பிரதேசத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா், செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவரது கூட்டணி கட்சிகளின் பிரதமா் வேட்பாளா் யாா் என அவாிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மாயாவதி, தான் 4 முறை உத்தரப்பிரதேச முதல்வராக இருந்துள்ளதாகவும் தனக்கு அனுபவம் உள்ளது என்றும் தோ்தலுக்கு பின் பிரதமா் குறித்து முடிவு செய்யப்படும் என்று சூசகமாக தனக்கு பிரதமா் பதவி மீது உள்ள ஆசையை அவா் வெளிப்படுத்தியுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close