2019 தோ்தல்- அருணாச்சலில் முதல் ஓட்டு பதிவானது

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Apr, 2019 03:21 pm
lok-sabha-elections-2019-first-vote-has-been-cast-from-arunachal

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முதல் வாக்குப்பதிவு அருணாச்சலப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

17ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதியான, இன்று, இந்தத் தேர்தலுக்கான முதல் வாக்குப்பதிவு அரங்கேறி விட்டது.

அருணாச்சலப் பிரதேசத்தில்தான் இது மக்களவைத் தேர்தலுக்கான முதலாவது வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுள்ளது. இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த வீரர் சுதாகர் நடராஜன், தன் தபால் வாக்கை நேற்று, முதலாவதாக பதிவு செய்து அசத்தியுள்ளார்.

எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்காக அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித்பூரில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று வீரர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதுதான் இந்த மக்களவைத் தேர்தலின் முதலாவது வாக்குப்பதிவு என கணக்கில் கொள்ளப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close