தோ்தலில் போட்டியிட சிறுநீரகத்தையும் விற்க தயாா்- அசாம் இளைஞா் அதிரடி

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Apr, 2019 05:13 pm
assam-independent-candidate-says-he-s-ready-to-sell-his-kidney

அசாம் மாநிலம் மோதாடி கிராமத்தைச் சேர்ந்த சுகுர் அலி எனும் அந்த நபர், தான் வசித்துவரும் பகுதியில் உள்ள ஷிபலி எனும் ஆற்றுக்கு மூங்கில் மேம்பாலம் அமைப்பதற்காக தனது சொந்த நிலத்தையே விற்றாா். 

அதோடு அல்லாமல், மக்களிடம் நிதியும் திரட்டி அங்குள்ளவர்களிடம் பாராட்டைப் பெற்ற நிலையில் இந்தத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி உள்ளார். இந்த நிலையில் அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காகவே செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், அவ்வகை அரசியல்வாதிகளுக்கு மாற்றாகவே இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய அவர், இதற்காக எந்தவித விபரீத முடிவுகளை எடுக்கவும்கூட தான் தயாராக இருப்பதாகவும் தனது சிறுநீரகத்தை விற்கவும் தயார் என்றும் தெரிவித்துள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close