அகிலேஷ் யாதவ் மனைவியான டிம்பிள் யாதவ் வேட்புமனுத் தாக்கல்

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Apr, 2019 06:44 pm
dimple-yadav-files-poll-papers-for-her-third-fight-from-up-s-kannauj-seat

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், தாம் எம்.பியாக உள்ள தொகுதியிலேயே மீண்டும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

அகிலேஷ் யாதவ் முதலமைச்சரான பிறகு, 2012ஆம் ஆண்டு கன்னோஜ் மக்களவைத் தொகுதி காலியானது. இதையடுத்து, கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலிலும், அதே தொகுதியில் போட்டியிட்டு, வென்று, எம்.பியாக உள்ளார்.

இந்நிலையில், கன்னோஜ் தொகுதியில் போட்டியிட, டிம்பிள் யாதவ், இன்று மீண்டும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அப்போது டிம்பிளின் கணவரான அகிலேஷ் யாதவ், ஜெயா பச்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close