எத்தனை வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றியது? பியூஷ்கோயல் கேள்வி 

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 08:41 am
piyush-goyal-statement-about-congress

கடந்த தேர்தல்களின்போது கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியுள்ளது என மத்திய அமைச்சர்  பியூஷ்கோயல் கேள்வி எழுப்பியுள்ளார். 

அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த வாக்குறுதியை கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலின்போதும், சோனியா காந்தி அளித்தார். ஆனால் நிறைவேற்றவில்லை என பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி பதவியேற்கும்போது சுமார் 18,500 கிராமங்கள் மின்சார வசதியின்றி இருந்தது. பாஜகவின் வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டுகளில் அரசு நிறைவேற்றியதன் மூலம் தற்போது நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் மின்சார வசதி உள்ளது.  கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில் சமூக, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு, ஒரே ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அதையும் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவு மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை மோடி தலைமையிலான அரசுதான் தற்போது நிறைவேற்றி உள்ளது என பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close