மேலும் 24 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Apr, 2019 12:28 pm
bjp-releases-another-list-of-24-candidates

பாஜக மேலும் 24 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர் உமாபாரதியின் தொகுதியில் அனுராக் சர்மா போட்டியிடுகிறார்.

மக்களவை தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி மே 23 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், பாஜக தலைவர் அமித்ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் 24 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை கட்சித் தலைமை வெளியிட்டது. மத்திய அமைச்சர் உமாபாரதி இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ஜான்சி தொகுதியில் அனுராக் சர்மா போட்டியிடுகிறார். 

இந்த பட்டியலில் அரியானாவின் 8 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் தலா 4 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டில் தலா 3 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா ஒரு தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close