பிரியாணிக்காக கட்டி உருண்ட காங்கிரஸ் தொண்டர்கள் - 9 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 02:02 pm
fight-between-congress-supporters-over-briyani-distribution

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் நகர் தொகுதியில், காங்கிரஸ் தொண்டர்கள் பிரியாணிக்காக ஒருவரை, ஒருவர் அடித்து கட்டி உருண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோதல் தொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முசாஃபர்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நஸிமுதீன் சித்திக் போட்டியிடுகிறார். தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தட்ஹேடா கிராமத்தில் உள்ள மௌலானா ஜமீல் என்ற கட்சிக்காரரின் வீட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு தொண்டர்களுக்கு, மதிய உணவாக பிரியாணி பரிமாற திட்டமிடப்பட்டிருந்தது.அப்போது முதலில் காத்திருந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை அடிப்படையில் பிரியாணி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், பிரச்னை தீவிரமாக ஆன நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, வன்முறையை கட்டுப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பாக மௌலானா ஜமீல், அவரது மகன் நயீம் அஹமது உள்பட 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close