பாஜக அல்லது காங்கிரஸ் ஆதரவின்றி 3-ஆம் அணி சாத்தியமாகாது - சந்திரபாபு நாயுடுவின் வாரிசு ஆருடம்

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 02:01 pm
third-front-nor-possible-without-bjp-or-congress-chandra-babu-naidu-s-son

பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் 3-வது அணியின் ஆட்சி அமைவதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நரா லோகேஷ் முதல்முறையாக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நரா லோகேஷ் அளித்துள்ள பேட்டியில், “அனைத்து கூட்டணியிலுமே பாஜக அல்லது காங்கிரஸ் இருக்கிறது. ஆனாலும், தேசிய அரசியலில் பிராந்தியக் கட்சிகளுக்கு தனி இடம் உண்டு. இந்நிலையில், பாஜக அல்லது காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு அணியும் நீடிக்காது. கற்பனையிலும்கூட அது சாத்தியமில்லை’’ என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close