பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 07:19 pm
bjp-to-release-manifesto-tomorrow-confirms-arun-jaitley

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பாஜக, தமது தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.

பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்ட வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, மத்தியில் ஆளும் பாஜக, ஏப்ரல் 8- ஆம் தேதி (நாளை), தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னதாகவே தகவல் வெளியானது. 

இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிட இருப்பதால், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போதும், தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான், பாஜக தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close