காங்கிரசுக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை வலுப்படுத்தும் : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Apr, 2019 07:29 pm
vote-to-congress-will-strengthen-terrorrism-naxalism-and-separatist-forces-yogi-adityanath

காங்கிரசுக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை வலுப்படுத்தும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

தெலுங்கானாவில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். 

யோகி ஆதித்யநாத் பேசுகையில், "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பயங்கரவாதம், நக்சலைட் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளை வலுப்படுத்தும், வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும். இதுபோன்றுதான், தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சிக்கு வாக்களிப்பதும் அசாதுதீன் ஓவைசி போன்றவர்களின் கைகளையே வலுப்படுத்தும்.

பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் தேசம் வளர்ச்சியடையும். முன்பு இருந்த காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்கியது, ஆனால் மோடி அரசு பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கியால் பதிலடியை கொடுத்து வருகிறது" என்று யோகி கூறினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close