ரெய்டுக்கு அஞ்சமாட்டோம்: மல்லிகார்ஜுன கார்கே காட்டம் 

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 01:02 pm
congress-leaders-will-not-afraid-for-it-raids-mallikarjuna-karke

''நாட்டில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில முதல்வர்கள் மற்றும் அவர்களின் செயலர்களின் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதன் முலம், மத்திய பா.ஜ., அரசு எங்களை மிரட்ட பார்க்கிறது. ஆனால், நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம்'' என, காங்., முத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், ''காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கும் மாநிலங்களில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரை ஏவி, காங்., முதல்வர்கள் மற்றும் அவர்களின் செயலர்களின் வீடுகள், அலுவலகங்களில் சாேதனை நடத்தப்படுகிறது. 

தேர்தல் நேரத்தில், நடத்தப்படும் இந்த சோதனையால், நாங்கள் அஞ்சப்போவதில்லை. எதையும் எதிர்கொள்ள தயார். மத்திய பா.ஜ., அரசின் இது போன்ற நடவடிக்கைகள், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. 

எத்தனை சோதனைகள் வந்தாலும், அதை எதிர்கொள்ள நாங்கள் தயார்'' என அவர் கூறினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close