"ஒரே தேசம்; ஒரே இலக்கு" என்பதே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 01:55 pm
bjp-manifesto-2019-pm-modi-speech

"ஒரே தேசம்; ஒரே இலக்கு" என்பதே எங்களது தாரக மந்திரம் என்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறியுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய  பாஜக-வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா வெளியிட்டனர். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக இருந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. 'தேசியவாதம் எங்கள் தூண்டுகோல்; மக்களாட்சியே எங்களது மந்திரம்' என்ற முறையில் நாங்கள் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.  "ஒரே தேசம்; ஒரே இலக்கு" என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறோம். 

இந்தியாவை மேம்படுத்த வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். அதிலும், தூய்மை இந்தியா திட்டம் மாபெரும் திட்டமாக உருவெடுத்துள்ளது. 2047 ஆம் ஆண்டுடன் இந்தியா சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகள் ஆகிறது. நமது எதிர்கால சந்ததிகள் 2047 ஆம் ஆண்டு இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதை இப்போது திட்டமிட வேண்டும்.

அதற்கு முன்னதாக, வரும் காலங்களில் பாஜக அரசு இந்நாட்டுக்கு செய்யும் திட்டங்கள் 2047 வரையில் பேசப்படும். 2019 மக்களவை தேர்தலுக்கான அறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எங்களுடைய அனுபவங்களும், வெற்றியுமே இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை உருவாக்க வழிவகுத்தது" என்று பேசியுள்ளார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close