ஜாதி, மத ரீதியிலான பேச்சு: தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 02:10 pm
sc-issues-notice-to-election-commission

ஜாதி, மத ரீதியிலான பேச்சுகளின்  மூலம், மக்கள் மத்தியில் பிரிவினையை துாண்டும் வகையிலும், நம்பிக்கைகளை கொச்சைபடுத்தும் வகையிலும் பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும் படி, தேர்தல் கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பத்திரிக்கைகள், ஊடகங்களில் பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள், அதன் செய்தி தொடர்பாளர்கள், மதம், ஜாதி அடிப்படையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதாகவும், அவர்களின் இதுபோன்ற பேச்சு, மக்களின் நம்பிக்கையை கொச்சைபடுத்தும் வகையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இப்படி பேசும் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்த அடுத்த விசாரணை, இம்மாதம், 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close