ஐ.டி., ரெய்டுக்கு கமல் ஆதரவு

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 02:23 pm
kamal-welcomes-it-raids-at-political-leaders-house-and-offices


அரசியல் தலைவர்கள் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வரவேற்பு தெரிவித்துள்ளார். மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். 

காங்., ஆட்சி செய்யும் மாநிலங்களில், முதல்வர்கள், முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சாேதனை நடத்தப்படுவது குறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியதாவது: 

மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஊழல்வாதிகள் ஒழிக்கப்படுவது அவசியம். தேர்தல் சமயத்தில் மட்டும், வருமான வரிச் சோதனை நடக்கவில்லை. இதற்கு முன்னரும் ஏற்கனவே பலமுறை நடத்தப்பட்டுள்ளது என அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close