காஷ்மீர் விடுதலை: பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 03:58 pm
nobody-can-stop-the-speacial-status-of-kashmir-if-anybody-try-then-it-will-free-from-the-nation

"காஷ்மீருக்கு அளிக்கப்படும், சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டால், இந்தியாவிடமிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்" என, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மிரட்டும் வகையில் பேசியுள்ளார். 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்படும் என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் குறப்பட்டுள்ளதற்கு, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பருக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவிர, காஷ்மீர் இந்தியாவிடமிருந்து பிரிந்து செல்லும் நிலை உருவாகும் என மிரட்டல் விடுத்துள்ளார். 

இது குறித்து, அவர் மேலும் பேசியதாவது: "வெளியிலிருந்து வருவார்கள், இங்கு சிலரை அதிகாரத்தில் அமர வைப்பார்கள், எங்கள் எண்ணிக்கையை குறைப்பார்கள், பின், எங்களுக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வதாக குறுவார்கள். 

செய்யுங்கள்... காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து தான் பாருங்களேன்... அப்புறம் தெரியும். இந்தியாவிடமிருந்து காஷ்மீர் பிரிந்து செல்வதை பார்க்கலாம். ஆம்... காஷ்மீரின் விடுதலையைத் தான் அல்லாவும் விரும்புவார். 

எந்த சூழலிலும், எங்கள் உரிமையை விட்டுத் தர முடியாது. நானும் பார்க்கிறேன். இங்கு அவர்களின் கொடியை நாட்ட யார் முன் வருவார்கள் என பார்க்கிறேன்" என அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close