பாஜக தேர்தல் அறிக்கை: ஒட்டுமொத்த அம்சங்கள் சுருக்கமாக..

  Dr.தர்மசேனன்   | Last Modified : 08 Apr, 2019 04:31 pm
election-manifesto-of-bjp-in-short-form

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இருவரும் இணைந்து வெளியிட்டனர். தொடர்ந்து அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக அளிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை ஒழிக்க மேலும் கடும் நடவடிக்கை

ராணுவத்துக்கு மேலும் சுதந்திரம் வழங்கப்படும்

தனிநபர் வருமான வரி மற்றும் வரி விகிதங்கள் குறைக்கப்படும்

விரைவில் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்படும்

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அட்டை வழங்கப்படும்

விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவு செய்யப்படும்

2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்

2024க்குள் 25 லட்சம் கோடி ரூபாய் விவசாய மேம்பாட்டுக்கு செலவழிக்கப்படும்

சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம்

குடிசை வீடுள்ள அனைவருக்கும் 2024க்குள் கான்கிரீட் வீடுகள்

வீடுகளற்ற அனைவருக்கும் வீடு  கட்டித் தரப்படும்

புதிய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படும்

நாடு முழுவதும் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில், ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் 

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் வழங்கிட நடவடிக்கை

60 வயதுக்கு மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம்

ஜிஎஸ்டி வரி மேலும் எளிமையாக்கப்படும்

ஆதார் எண்ணுடன் அனைத்து நிலப்பத்திரங்களும் இணைக்கப்படும்

அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

சபரிமலை சம்பிரதாயத்தை பாதுகாத்திட நடவடிக்கை

சம்ஸ்கிருத மொழியை பள்ளிகள் அளவில் பிரபலப்படுத்த நடவடிக்கை

மேலும், 200 கேந்திரிய மற்றும் நவோதய வித்யாலய பள்ளிகள் கட்டப்படும்

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிடும் சட்டப்பிரிவு 370 நீக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்குவதை தடை செய்யும் 35ஏ நீக்கம்

இஸ்லாமிய பெண்களின் உரிமையை நிலைநாட்டிட முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்

அனைத்து மதத்தவரும் சமம் என்பதை நிறுவிட பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்

100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நாட்டின் உள்கட்டமைப்பு விரிவாக்கம்

மேலும் 60,00 கிமீக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்படும்

2024க்குள் மேலும் 200 விமான நிலையங்கள் அமைக்கப்படும்

பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்

அனைத்து ரயில் தடங்களும் மின்மயமாக்கப்படும்

அனைத்து மக்களின் பொருளாதார நிலையை மேலும் மேம்படுத்திட உறுதி

ஒரே நேரத்தில் சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்

ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை மேலும் விரைந்து வாங்கிட நடவடிக்கை

அனைவருக்கும் வேலைவாய்ப்பு

நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கென புதிய ஆணையம்

யோகாவை உலக அளவில் கொண்டு செல்ல மேலும் நடவடிக்கை

nestm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close