ஒமர்,பரூக்,மெஹபூபா தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 06:39 pm
pil-against-omar-farook-and-mehabooba-seeking-ban-on-contesting-loksabha-election

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசி வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள், ஒமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக முன்னணியை சேர்ந்த மெஹபூபா முப்தி ஆகியோருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஜம்மு - காஷ்மீரில், முன்னாள் முதல்வர்களாக இருந்த, தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த ஒமர் அப்துல்லா, அவரது தந்தை பரூக் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக முன்னணியை சேர்ந்த மெஹபூபா முப்தி ஆகியோர், தொடர்ந்து, இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக பேசி வருகின்றனர். 

காஷ்மீர், இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும். காஷ்மீருக்கென தனி பிரதமர் வேண்டும் என, தொடர்ந்து கருத்து குறி வருகின்றனர். இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் இவர்களை, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது எனக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close