மாயாவதியின் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 11:27 am
mayawati-s-party-is-sinking-boat-pm-modi-on-cnn-ibn-interview

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.  ‘நியூஸ் 18’ செய்தி குழுமத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மாயாவதி பிரசாரம் செய்தபோது, முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மத அடிப்படையிலான இந்தப் பேச்சு குறித்து அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில், “மாயாவதி குறித்து எனக்கு கவலையில்லை. அவரது கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களின் ஆதரவை அவர் எதிர்பார்க்கிறார். மாயாவதிக்கு இக்கட்டான சூழல் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மதச்சார்பின்மைக்கு கொடி பிடிப்பவர்கள் குறித்துதான் நான் கவலைப்படுகிறேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close