முதல்வரும், அவரது மகனும் ஒரே நாளில் மனு தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 12:31 pm
kamalnath-and-his-son-file-nominations-for-polls

மத்தியப் பிரதேச மாநிலம், சிந்துவாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட, அம்மாநில முதல்வர் கமல்நாத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். சிந்துவாரா நாடாளுமன்றத் தொகுதிக்கு கமல்நாத்தின் மகன் நகுல் நாத் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது, கமல்நாத் தேர்தலில் போட்டியிடவில்லை. சிந்துவாரா தொகுதியின் எம்.பி.யாக இருந்த அவர், அப்பதவியை ராஜிநாமா செய்துவிட்டு முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், கமல்நாத் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக சிந்துவாரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி விலகினார். இத்தகைய சூழலில் அத்தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளராக கமல்நாத் இன்று மனு தாக்கல் செய்தார்.

அதே சமயம், கமல்நாத்தின் கோட்டையாக இருந்த சிந்துவாரா நாடாளுமன்றத் தொகுதியில் அவரது மகன் நகுல் நாத்தையே வேட்பாளராக காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. இந்நிலையில், அவரும் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close