கருப்புப் பணத்தை பதுக்குமிடமாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகள் உள்ளன - மத்திய அமைச்சர் விலாசல்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 01:24 pm
congress-leaders-houses-become-atms-of-black-money-muktar-abbas-naqvi

கருப்புப் பணம் நிரம்பிய ஏடிஎம் மையங்களாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகள் உள்ளன என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். டெல்லியில், இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:


பினாமி சொத்துகளின் மறுஉருவமாக காங்கிரஸ் உருவெடுத்து வருகிறது. அக்கட்சித் தலைவர்களின் வீடுகள் எல்லாம், கருப்புப் பணத்துக்கான ஏடிஎம் மையங்களாக மாறி வருகின்றன. அங்கு நாள்தோறும் ஏராளமான கருப்புப் பணம் கையகப்படுத்தப்படுகிறது. வருமான வரித்துறையின் சோதனைகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அந்தப் பணமெல்லாம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை அமைப்புகளுக்கும், நாட்டு மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி பதில் சொல்லியாக வேண்டும் என்றார் நக்வி.
newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close