பவுடர் பூசாததால் போட்டோ எடுக்க மறுக்கிறார்கள்: குமாரசாமி கதறல்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 05:31 pm
media-omits-me-because-i-am-not-using-make-ups-like-pm-modi-kumarasamy

"பிரதமர் நரேந்திர மாேடி, தினமும் காலை எழுந்ததும் குளித்து முடித்து முகத்தில் பவுடர் பூசுகிறார்; மாலை வேக்ஸ் அல்லது கிரீம் பூசி மேக் அப் செய்து கொள்கிறார். அதனால், அவர் முகம் பளிச்சென இருக்கிறது. நான் அதெல்லாம் செய்யாததால், ஊடகங்கள் கூட என்னை படம் பிடிப்பதில்லை, திரையில் காண்பிப்பதில்லை" என, கர்நாடக முதல்வர் குமாரசாமி வேதனை தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின் போது, மாநில முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான குமாரசாமி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மாேடி, மேக் அப் செய்வதில் வல்லவர். தினமும் காலை எழுந்து குளித்ததும், முகத்திற்கு பவுடர் பூசிக்கொள்வார். 

மாலை நேரங்களில், முகம் கழுவி, முகத்தில் கிரீம் அல்லது வேக்ஸ் தடவிக் கொள்கிறார். அதனால், அவரது முகம் எப்போதும் பளபளப்பாக உள்ளது. அதன் காரணமாகவே, ஊடகங்கள் அவரை சுற்றி சுற்றி வருகின்றன. 

நான் இன்று குளித்தால், நாளை காலை தான் மீண்டும் குளிப்பேன். அதனால், என் முகம் சோர்வாக காணப்படும். இதனாலேயே, மீடியாக்கள் கூட என்னை போட்ட எடுக்க மறுக்கின்றன என அவர் பேசினார். 

அவரது இந்த பேச்சு, கூட்டத்தினரிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close